Monday, July 14, 2008

எதிர்பார்ப்பு

சக ஊழியர்கள் எதிர்பார்ப்பை தீர்க்கிறதா நான் செய்யும் பணி
என்று நித்தம் நினைக்கிறேன் ...
என் வாழ்வோடு பிணைந்த பலரின் எதிர்பார்ப்புகளையோ மறக்கத்துடிக்றேன் ....
என்னோடு அமர்ந்து ஒரு நொடி பேசக்கூடாதா ?
என் தாயின் எதிர்பார்ப்பு
குடும்ப சுமைகளை நான் தாங்குவேன்;
இன்ப நிகழ்வுகளை உன்னோடு பகிரட்டுமா?
என் தந்தையின் எதிர்பார்ப்பு
பல கதைகள் பேசினோம் அன்று...
ஒரு நொடி மௌனமாகவேனும்
என் அருகில் அமர்வாயா?
என் தமக்கையின் எதிர்பார்ப்பு
மகிழ்ச்சியான தருணங்கள் நம் கடந்த காலத்திலுண்டு...
அதை அசைப்போட்டு சுகம் காண வர மாட்டாயா?
என் நண்பர்களின் எதிர்பார்ப்பு
அவர்களுக்கு புரியுமா? இந்த எதிர்பார்ப்புகள் என் ஏக்கம் ஆனது ?
எதிர்பார்ப்புகளின் தேக்கம் ... எங்களுக்கு இடையே மேலும் மேலும் தேங்குகிறது...
எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாததன் குற்ற உணர்வும் கூட...
ஒரு நாள்... ஒரு மணி நேரம்... ஒரு நொடி...
இத்தனை உனர்வுகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை மட்டும்
இறக்கையாகக்கொண்டு பறக்க வேண்டும்...
நிறைவேறுமா??? என் எதிர்பார்ப்பு...